×

3 தக்காளி நாற்று நடும் பணி மும்முரம்

ராயக்கோட்டை, பிப்.14: ராயக்கோட்டை பகுதியில் சீசனை எதிர்நோக்கி தக்காளி நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானம். தோட்டத்தில் அறுவடை செய்யப்படும் தக்காளியை ராயக்கோட்டையில் உள்ள மண்டிகளுக்கு மொத்தமாக கொண்டு வந்து, ஏலம் விட்டு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், வெளி மாநிலங்களில் தக்காளி சீசன் குறைந்து வருவதாகவும், அது முற்றிலும் குறையும் சமயத்தில், ராயக்கோட்டை பகுதியில் சீசன் ஆரம்பமாகும்.

மார்ச் மாதம் முதல் ஜூலை வரை சீசன் நீடிக்கும் என்பதால், இப்பகுதி விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நிலத்தில் சொட்டு நீர் பாசனத்திற்கு குழாய் பதித்து, மல்ச்சிங்சீட் என்னும் பாலத்தீன் பேப்பர்களை போர்த்தி அதில் துளையிட்டு தக்காளி நாற்றுகளை நட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் பலனளிக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

The post 3 தக்காளி நாற்று நடும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Krishnagiri district ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை